கொல கேசுல உள்ள தள்ளிடுவோம்... தமிழக விவசாயிகளை மிரட்டும் டெல்லி போலீஸ்
தமிழக விவசாயிகள் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடித்துக் கொள்ளாவிட்டால் கொலை வழக்கில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று டெல்லி போலீசார் விவசாயிகளை மிரட்டி வருகின்றனர்.
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று குட்டிக் கரணம் போட்டு போராடி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குட்டிக் கரணம்
போராட்டத்தின் 31வது நாளான இன்று குட்டிக் கரணம் போட்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குட்டிக் கரணம் போடுவது ஒன்றுதான் பாக்கி அதனையும் செய்தாகிவிட்ட நிலையில் மத்திய அரசு இப்போதாவது தங்களை திரும்பி பார்க்குமா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏமாற்றம்
கடந்த ஒரு மாதமாக அசராமல் போராடி வரும் விவசாயிகளை போலீசார் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடியிடம் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி டெல்லி போலீசார் தமிழக விவசாயிகளை ஏமாற்றினார்கள். அதன் தொடர்ச்சியாய் விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள்.

கொலை கேஸ்
இந்நிலையில், மீண்டும் போலீசார் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதுவும் கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று டெல்லி போலீசார் மிரட்டுவதாக அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அகல மாட்டோம்
மத்திய அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யும் வரையில் டெல்லியில் இருந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், கொலை வழக்கு போடுவோம் என்று மிரட்டினாலும் கவலையில்லை என்றனர். கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து அகல மாட்டோம் என்று உறுதியாக அய்யாகண்ணு கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications