முல்லைப் பெரியாறு அணைக்கு "புலிகளால்" ஆபத்து இல்லை- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் நேரடி ஆபத்து இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அம்மனுவில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கங்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என தமிழக அரசு தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷியே முகமது, நக்சலைட்டுகளால் அணை கட்டுமானங்களுக்கு ஆபத்து; தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் அவர்களால் ஆபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதைத்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். இது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தொடர்பாக புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்களில் உடன்பாடு இல்லை என கூடுதல் மனுவைத் தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என கூறியிருந்தார்.
இதனடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை; விடுதலைப் புலிகள் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications