7 தமிழர் விடுதலைக்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஆலோசனைதான் கேட்கலாமே தவிர அனுமதிகேட்க வேண்டிய தேவை இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில் பேரறிவாளன் உட்பட 3 தமிழரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனைத் தொடர்ந்து ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. இது குறித்து மத்திய அரசின் ஆலோசனையை தமிழக அரசு கேட்டது.
ஆனால் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய இந்திய குற்றவியல் சட்டத்தின் 435-வது பிரிவின் கீழ் மத்திய அரசு "ஒப்புதல்" பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசே 7 பேரையும் விடுவிப்பதற்கு எந்த முட்டுக்கட்டையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனால் தமிழக அரசு 7 பேரையும் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசுக்கு அறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியிருந்தது. ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து ஒரு சீராய்வை மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சீராய்வு மனுவில் 7 தமிழர் விடுதலை குறித்து 435-வது பிரிவின் கீழ் மத்திய அரசிடம் ஆலோசனைதான் தமிழக அரசு கேட்கலாமே தவிர மத்திய அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications