காவிரி போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்கிறார்.
டெல்லி: தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. அரசியல் கட்சிகளும், மாணவர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் காவிரி போராட்டம், காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்ய நேற்றிரவு தனி விமானம் மூலம் ஆளுநர் புரோஹித் டெல்லி புறப்பட்டார். இந்நிலையில் தற்போது பிரதமரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார் ஆளுநர்.
அப்போது காவிரி தொடர்பாக நிச்சயம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திக்கிறார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications