7 தமிழர் விடுதலை: மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு!
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 தமிழரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த மாதம் 18ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இது குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம் மனுவை விசாரித்த நீதிபதிகள் 7 பேரை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தனர். இது தொடர்பாக பதில் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தமிழக அரசு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம் மனுவில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுக்கு, மாநில அரசு தகவல் தெரிவித்தது. இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு, முடிவு எடுக்காமல் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதனால் மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இம் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications