For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாய் மறைவு: திருமாவளவன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் இரங்கல்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வாஜ்பாயின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

    டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
    அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    திருநாவுக்கரசர் இரங்கல்

    திருநாவுக்கரசர் இரங்கல்

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், வாஜ்பாய் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு. அவரது மறைவு பெரிய வருத்தத்தை அளிக்கிறது. இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர் அவர்'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருமாவளவன் இரங்கல்

    திருமாவளவன் இரங்கல்

    விடுதலை சிறுத்தலைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அனைவராலும் விரும்பப்பட்ட பன்முகம் கொண்டவர் வாஜ்பாய். மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் கூட மதித்து நடப்பவர் வாஜ்பாய். திமுகவின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்று நிறைவேற்றியவர் வாஜ்பாய். மிகச் சிறந்த ஜனநாயக வாதி வாஜ்பாய், சிறந்த கவிஞர், பண்பாளர். சிறுபான்மை மக்களை மதித்து நடத்தியவர் வாஜ்பாய். வாஜ்பாய் மறைவு மிகுந்த வேதனைக்குரியது, என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜி.கே.வாசன் இரங்கல்

    ஜி.கே.வாசன் இரங்கல்

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், வாஜ்பாய் மறைவு இந்தியாவின் பேரிழப்பு.கடுமையான உழைப்பால் முன்னேறிய தலைவர்.மிகச் சிறந்த பேச்சாளர், அஞ்சாதவர், அடக்கமானவர், பண்பாளர்.நாட்டுமக்களுக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்தவர்.வாஜ்பாய் மறைவு பாஜகவுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு, என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தம்பித்துரை இரங்கல்

    தம்பித்துரை இரங்கல்

    தமிழக அதிமுக எம்பி, தம்பித்துரை ''உலக இந்தியர்களும் விரும்பிய தலைவர் வாஜ்பாய். மாபெரும் அறிவாளி, சிறந்த ஜனநாயக வாதி. அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.'' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    TN politicians condolence for Former PM Vajpayee death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X