காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் தமிழக சுற்றுலாப் பயணி பலி
காஷ்மீரில் திங்கள்கிழமை காலை நடந்த கல்வீச்சு சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த அவரது பெயர் ஆர்.திருமணி (22). நர்பல் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் ஏற்பட்ட கல்வீச்சில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு சவுரா பகுதியில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாகவும் அங்கே சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் இறந்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.
அவர் குல்மார்க் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது புட்காம் மாவட்டத்தில் அந்தப் பேருந்தின் மீது வீசப்பட்ட கல்லில் அவர் காயமடைந்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக இரவு 8 மணிக்கு அறிவிக்கப்பட்டது என்றும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
காவல் கண்காணிப்பாளர் வைத்தியா இந்த சம்பவத்தை உறுதி செய்ததாகக் கூறுகிறார் பிபிசி செய்தியாளர்.
ஒமர் அப்துல்லா செய்தி
சென்னையில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததற்கு ஆழமாக வருந்துவதாகவும், இந்த குண்டர்களை, அவர்களின் வழிமுறைகளை, கருத்தியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.
https://twitter.com/OmarAbdullah/status/993534792640684034
இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்று மற்றொரு பதிவில் தெரிவித்துள்ள அவர், "ஜம்மு காஷ்மீர் அரசு தோற்றுப் போனது, முதல்வர் தோற்றுப் போனார், பாஜக-பிடிபி கூட்டணி தோற்றுப் போனது," என்றும் பதிவிட்டுள்ளார். "ஒரு சுற்றுலாப் பயணி சென்ற வாகனத்தின் மீது கல்வீசி கொன்றுள்ளோம், விருந்தினரைக் கொன்றுள்ளோம்" என்றும் அவர் மற்றொரு டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக பதவியேற்றார் புதின்
- அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்கும்: இரான் அதிபர் எச்சரிக்கை
- சுகப்பிரசவ குழந்தைகள் மட்டும்தான் நோய் எதிர்ப்பு தன்மையுடன் இருக்குமா?
- ஹவாயில் கடும் எரிமலை சீற்றம்- வீடுகள் சேதம் (புகைப்பட தொகுப்பு)
-
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications