தமிழக வாகனங்கள், கடைகளை மட்டும் தேடி, தேடி சேதப்படுத்தும் கன்னட அமைப்பினர்! மற்றவர்கள் சேஃப்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள், ஹோட்டல்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பெங்களூரில் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்கள், ஹோட்டல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

- பெங்களூரில் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல்கள் சுமார் 30 பகுதிகளில் இயங்குகின்றன. இதில் மைசூர் ரோடு- சாட்டிலைட் பஸ் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன், பன்னேர்கட்டா ரோட்டிலுள்ள ஆனந்தபவன் ஹோட்டல்கள் கல்வீச்சுக்கு உள்ளாகின.
- இந்திராநகர் பகுதியில் உள்ள பூர்விகா செல்போன் ஷோரூம் மற்றும் கிரி நகர் பூர்வீகா ஷோரூமிலும் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவம் அரங்கேறியது.
- தமிழக பதிவெண் கொண்ட தனியார் பஸ், மடிவாளா அருகே கல் வீச்சில் சிக்கியது.
- பெங்களூர் மற்றும் புற நகரில் இன்று மதியத்திற்குள், தமிழக பதிவெண் கொண்ட 12 லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
- பெங்களூர், சாம்ராஜ்பேட்டை பகுதியில், கோகுல்ராஜ் டிரான்ஸ்போர்ட் என்ற தமிழருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. நிலைமையை அறிந்து, குடோனில் அனைத்து லாரிகளையும் அந்த நிறுவனத்தார் நிறுத்தி வைத்திருந்தனர். போலீசாரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் கன்னட அமைப்பினர் போலீசாரையும் மீறி உள்ளே வந்து 10 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர். தீ வைத்து எரிக்க முற்பட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- சாலையில் மட்டுமல்லாது, குடோனில் நிற்கும் தமிழக லாரிகளை கூட தேடி தேடி சேதப்படுத்தினர் கன்னட அமைப்பினர். இதனால் தமிழர்கள் தங்களது உடமைகள், உயிருக்கு சேதம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலுள்ளனர்.
- மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தாலும்கூட, பெங்களூர் நகர பஸ்கள், கேஎஸ்ஆர்டிசி போன்ற பஸ்கள் இயங்குகின்றன. கால் டாக்சி, ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மட்டுமே சேதப்படுத்தப்படுகின்றன. இதை பார்த்து தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
More From
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம் -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications