குஜராத்தில் தாகேஜ்- கோகா படகுப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
குஜராத்தில் தாகேஜ்- கோகா படகுப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
காந்திநகர்: குஜராத்தில் தமது கனவுத் திட்டமான தாகேஜ்- கோகா படகுப் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பா.ஜ.க.,விற்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமான ஒன்று. அதனால், வெற்றிபெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த வாரத்தில் கூட பல்வேறு சலுகைகளை அறிவித்தார் முதல்வர் விஜய் ரூபாணி.
இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று குஜராத் காலை குஜராத் வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி. தாகேஜ் - கோகா படகுப் போக்குவரத்துத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தத் திட்டத்திற்கு 2012ல் அடிக்கல் நாட்டியவர் மோடி. ரூ 615 கோடி செலவில் தயாராகி இருக்கிறது இத் திட்டம். இது மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்று.












Click it and Unblock the Notifications