For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிமாச்சல பிரதேசத்தில் காங். ஆட்சி பறிபோகிறது.. பாஜக அரசு அமையும்: டைம்ஸ்ஆப் இந்தியா எக்ஸிட் போல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹிமாச்சல் பிரதேசத்திலும் ஆட்சி அமைக்கிறது பாரதிய ஜனதா... கருத்துகணிப்பில் தகவல்

    டெல்லி: ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா- சிவோட்டர் எக்ஸிட் போல் கூறுகிறது.

    ஹிமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கும் நவம்பர் 9ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

    வரும் 18ம் தேதி குஜராத் தேர்தல் முடிவுகளின்போது, ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.

    நேரடி போட்டி

    நேரடி போட்டி

    குஜராத் தேர்தலை போலவே ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளும் மக்களிடம் கவனம் ஈர்த்துள்ளன. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் நடுவேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

    டைம்ஸ் ஆப் இந்தியா எக்ஸிட் போல்

    டைம்ஸ் ஆப் இந்தியா எக்ஸிட் போல்

    இந்த நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா- சிவோட்டர் எக்ஸிட் போல் இன்று வெளியாகியுள்ளது. இதன்படி, பாஜக-41 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்கு சதவீதம்

    வாக்கு சதவீதம்

    பாஜகவின் வாக்கு சதவீதம் 47.6 என்ற அளவிலும், காங்கிரசின் வாக்கு சதவீதம், 44.0 என்ற அளவிலும், பிறர் 8.3 வாக்கு சதவீதமும் பெறுவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    பாஜக தொண்டர்கள் உற்சாகம்

    பாஜக தொண்டர்கள் உற்சாகம்

    இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சி ஆட்சி பறிபோவதால் அக்கட்சி தொண்டர்கள் வருத்தமடைந்துள்ளனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ந

    English summary
    TOI Online-CVoter exit poll says BJP will win Himachal Pradesh Assembly Elections with 41 seats, Congress to be reduced to 25 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X