டோல்கேட் கட்டணம் ரத்து டிச.2 நள்ளிரவு வரை நீட்டிப்பு - லாரி ஸ்டிரைக் அறிவிப்பு எதிரொலி
லாரி உரிமையாளர்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவு வரை டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் 100 ரூபாய் மட்டும் அதிகளவு உபயோகிக்கப்பட்டது. இதனால் 500,1000 ரூபாய்க்கு உபயோகிக்க முடியாமலும், 100 ரூபாய் கிடைக்காததால், சில்லரை பிரச்னை வலுத்தது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு ஊழியர்கள் மறுத்தனர். இதனால் சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று 3 முறை மத்திய அரசு காலஅவகாசத்தை நீட்டித்தது.
இதனையடுத்து இன்று நள்ளிரவு வரை விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக கால அவகாசம் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில்லரை தட்டுப்பாடு பிரச்னை சரிவர தீராததால் சுங்கக்கட்டணத்தை டிசம்பர் 31ம் தேதிவரை வசூலிக்கக் கூடாது என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ரூபாய் நோட்டு பிரச்சனை தீரும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என தென்னிந்திய மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடுமுழுவதும் டிசம்பர் 31ம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், அவ்வாறு அறிவிக்காவிட்டால், நள்ளிரவு முதல் போராட்டம் நடத்தவும் லாரி உரிமையார்கள் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சுங்க கட்டண ரத்து செய்யப்படுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுங்க கட்டண ரத்து செய்யப்படுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications