Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திர அமைச்சர் ரோஜாவின் செருப்பை கையில் எடுத்து வந்த ஊழியர்.. தீயாய் பரவும் வீடியோவால் பரபரப்பு

நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சருமான ரோஜாவின் செருப்பை கையில் எடுத்து வந்த ஊழியர்

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் செருப்பை அந்த துறையின் ஊழியர் ஒருவர் எடுத்து வந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆந்திர மகள், தமிழ்நாட்டின் மருமகள் என்ற அடைமொழிகளை கொண்டவர் நடிகை ரோஜா. 1990 களில் தென்னிந்திய மொழி சினிமாவில் கொடி கட்டி பறந்தார். ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

இவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினாலும் ரியாலிட்டி ஷோக்களை ஏற்று நடத்தி வந்தார். இதைத் தொடர்ந்து அரசியலில் தடம் பதித்தார். முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். ஆனால் அங்கு சொந்த கட்சியினராலேயே ரோஜாவின் முன்னேற்றத்திற்கு தடை வந்தது.

அவமானம்

அவமானம்

மேலும் தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதையும் தேர்தலில் திட்டமிட்டு சொந்த கட்சியினரே தோல்வி அடைய செய்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத ரோஜா தீப்பிழம்பாக எழுந்து தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறார். இவர் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி

மக்களோடு மக்களாக பழகி தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ரோஜாவுக்கு சுற்றுலா துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட துறையை வளர்க்க ரோஜா கடுமையாக பாடுபட்டு வருகிறார்.

விளையாட்டு போட்டி

விளையாட்டு போட்டி

மாநிலத்தில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் தானும் விளையாடி தொடங்கி வைக்கிறார். குத்துச் சண்டை, பாட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிய ரோஜா கபடியையும் விட்டு வைக்கவில்லை. இடுப்பில் புடவையை செருகி கொண்டு ரோஜா மாணவிகளுடன் விளையாடிய போது அவர் தடுக்கி கீழே விழுந்தார்.

பதறிய மாணவிகள்

பதறிய மாணவிகள்

அப்போது அந்த மாணவி பதறி போய் சாரி சொன்னார்கள். மேலும் அந்த மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் கடுமையாக கண்டித்தனர். அப்போதும் ரோஜா, மாணவிகளை சமாதானப்படுத்தி விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்றார். அது போல் பள்ளி நிர்வாகத்தினரையும் மாணவிகளை திட்டுவதிலிருந்து கட்டுப்படுத்தினார். கோயில் திருவிழாக்கள், பள்ளி , கல்லூரி விழாக்களிலும் மாணவ, மாணவிகளுடன நடனம் ஆடியுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

தொடர்ந்து மக்களுக்காக நலத்திட்டங்களை வழங்கி நன்மதிப்பை பெற்ற ரோஜா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனக்கு ஓட்டு போட்டு 2ஆவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்த தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக நகரியிலேயே வீடு கட்டி குடிபெயர்ந்தார். இப்படிப்பட்ட ரோஜா அண்மையில் செய்த செயல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய லங்கா

சூரிய லங்கா

ஆந்திராவில் உள்ள பாபட்லாா சூரியலங்கா கடற்கரையை பார்வையிட சுற்றுலா துறை அமைச்சர் என்ற முறையில் சென்றார். அப்போது கடற்கரை மணலில் இறங்கி நடக்கத் தொடங்கினார். இந்த நிலையில் ரோஜா மணலில் நடக்க முடியாததாலும்கடல் நீரில் நிற்பதற்காகவும் தனது செருப்பை சுற்றுலா துறை ஊழியரிடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோஜாவின் செருப்பை ஏந்திய ஊழியர்

ரோஜாவின் செருப்பை ஏந்திய ஊழியர்

இது தொடர்பான வீடியோவில் ரோஜா மணலில் செருப்புடன் நடந்து வருவது போன்றும் அவர் அணிந்திருக்கும் அதே செருப்பை ஊழியர் ஒருவர் கையில் வைத்திருப்பது போன்றும் பதிவாகியுள்ளது. இது நெட்டிசன்கள் மத்தயில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா அமைச்சரானதும் சித்தூர் மாவட்டத்தில் அவரது செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் நிறைய நிகழ்வுகள் அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர் விளக்கம்

ஊழியர் விளக்கம்

இதுகுறித்து செருப்பை கையில் ஏந்தியதாக சொல்லப்படும் சுற்றுலா துறை ஊழியர் சிருத்யோகி சிவ நாகராஜு கூறுகையில் அமைச்சர் ரோஜாவின் செருப்பை கையில் எடுக்க யாரும் சொல்லவில்லை. நானாகவேதான் தண்ணீரில் அடித்துச் சென்றுவிடுமோ என நினைத்து அந்த செருப்பை எடுத்து வேறு பக்கம் வைத்தேன் என்றார். இந்த ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் உள்ளது ரோஜாவின் செயல் என பலர் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து ரோஜா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+