குஜராத்தில் பெரும் சோகம்.. ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. சுற்றுலா சென்ற மாணவர்கள் 12 பேர் பலி
அகமதாபாத்: குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 12 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 14 பேர் பலியாகியுள்ளனர். இவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹரனி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலாவாசிகள் படகு சவாரி செல்வது வழக்கம். அந்த வகையில் குஜராத்தில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 23 பேரும் 4 ஆசிரியர்களும் சுற்றுலா சென்றனர். அப்போது, இவர்கள் அனைவரும் இந்த ஆற்றில் சவாரி செய்துள்ளனர். படகு சவாரி சென்றபோது எதிர்பாரத விதமாக ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் உயிரை காப்பாற்ற அலறினர். உடனடியாக விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் 12 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என 14 பேரை சடலமாக தான் மீட்க முடிந்தது.
சுற்றுலா சென்ற மாணவர்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் வேதனையை தருகிறது. இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் இந்த சோக சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குஜராத் முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: - வதோதராவில் உள்ள ஹரினி ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகம் அளிக்கிறது.
அப்பாவி குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications