உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் கலவரம்

Subscribe to Oneindia Tamil

முசாஃபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வணிகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.

அண்மையில் முசாஃபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களுக்குச் சென்றனர்.

Trader shot dead, tension mounts in Muzaffarnagar

இந்நிலையில் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஷாபூர் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர்.

அங்குள்ள வீடு, கடைகள், வாகனங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்முறை தொடர்பாக சிலரை கைது செய்தனர்.

மேலும் வன்முறை நீடிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வன்முறையை தடுக்க முசாஃபர்நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+