"மடிமேல" உட்கார்ந்து, கட்டிப்பிடித்து முத்தம் தந்த பெண்.. அரண்ட மக்கள்.. முதல்வர் காதுக்கு போன விஷயம்
கான்பூர்: வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது.. இதை பார்த்த நெட்டிசன்கள், முகம்சுளித்து, தலையிலடித்து கொண்டு போகிறார்கள்.. என்னவாம்?
உத்தரபிரதேசத்தின் காசியாபாத் ஹைவேஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதிக்கு அருகிலுள்ள NH9 நெடுஞ்சாலையில் ஒரு ஜோடி பைக்கில் சென்றுள்ளது.

பைக்கை ஒரு இளைஞர் ஓட்டுகிறார்.. இளம்பெண், அந்த பைக் பின்பக்கமாக உட்கார்ந்துள்ளார்.. பைக் ஓட்டும் இளைஞரை இறுக்கமாக கட்டிப்பிடித்தவாறே உட்கார்ந்திருந்தார..
கட்டிப்பிடித்து: இப்படி 2 பேரும் கொஞ்ச தூரம் போகிறார்கள்.. பிறகு, திடீரென பின்சீட்டில் இருந்து எழுந்து, பைக் ஓட்டும் இளைஞரின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார் அந்த பெண்.. அப்படியே 2 பேரும் சிரித்தவாறே ரொமான்ஸ் செய்து கொண்டு போகிறர்கள்..
ரோட்டில் சென்றவர் யாரோ, இதை பார்த்துவிட்டு, செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.. இதை பார்த்த அனைவருமே கடும் கோபமாகிவிட்டார்கள்.. ரொமான்ஸ் செய்வதற்கு வேற இடமே கிடைக்கலையா? ஆபத்தான ஸ்டண்ட்களை வைரலாக்குவதற்காக, எந்த எல்லைக்கும் செல்வதா? என்று கண்டித்து வருகிறார்கள்.
வைரல் வீடியோ: மேலும், சம்பந்தப்பட்ட ஜோடி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச போலீசுக்கும், காசியாபாத் போக்குவரத்துகாவல் துறைக்கும், கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர்.
இதில் ஒரு நபர் உத்தரபிரதேச முதலமைச்சருக்கே விஷயத்தை கொண்டு போய்விட்டார்.. "இது உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் நடந்துள்ளது. இங்கே விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முக்கியமில்லை. பைக் ஓட்டுபவரின் மடியில் அந்த பெண் எப்படி அமர்ந்திருக்கிறார் என்று பாருங்கள்? விஷயத்தை அறிந்து தேவையான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் இந்த ஜோடி கடைப்பிடிக்கவில்லை.. 2 பேருமே ஹெல்மெட் அணியவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பிறகு, காசியாபாத் காவல்துறை துணை ஆணையர் இதுகுறித்து பதிலளித்திருந்தார்.. சம்பந்தப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
விளக்கம்: அதுமட்டுமல்ல, காவல்துறை தரப்பிலும் ஒரு விளக்கம் தரப்பட்டது.. "இந்த ஜோடிக்கு காசியாபாத் போக்குவரத்து போலீசார் மிகப்பெரிய அபராதம் விதித்தனர். ட்விட்டரில் இருந்து பெறப்பட்ட புகாரை அறிந்து, அவர்களுக்கு அபராதம் நடவடிக்கை விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஜோடிக்கு அபராதமும் விதித்துள்ளதாக தெரிகிறது.. ட்விட்டரில் இருந்து பெறப்பட்ட புகாரை அறிந்து, அவர்களுக்கு அபராதம் நடவடிக்கை விதிக்கப்பட்டது என்றும், இந்த விஷயத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய சென்னையிலும் இப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. சில மாதத்துக்கு முன்பு, சென்னை நெடுஞ்சாலையில், இப்படித்தான் ஒருஜோடி சென்றிருக்கிறது.. அந்த பையன் பைக் ஓட்டினால், இந்த பெண், பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ஏறி உட்கார்ந்துகொண்டார்..
மதுபோதை: இதையும் சாலையில் சென்றவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.. பிறகுதான் தெரியவந்தது.. அந்த இளம்ஜோடி, தண்ணி அடித்திருந்ததாம்.. போதையில் வண்டி ஓட்டி வந்துள்ளார்கள் என்றதுமே, பொதுமக்கள் வாயடைத்து போய்விட்டனர்.
கொந்தளிப்பு: பசங்க ரேஞ்சுக்கு, பொண்ணுங்களும் இப்படி இறங்கிட்டாங்களே, இவங்களை கைது செய்யவேண்டாம், ஆனால், எச்சரிக்கை அபராதம் விதிக்க வேண்டும் கொதித்தெழுந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகமாகி வருவதால், போலீசார் எவ்வளவோ விழிப்புணர்வுகளை விடாமல் சொல்லி வருகிறார்கள்.. ஆனால், பெரிதாக யாரும் மதிப்பதில்லை..
குறிப்பாக, இளைஞர்கள், ஹெல்மெட் கூட போடாமல் பைக்குகளை ஓட்டி வருவதுடன், பைக்குகளில் சர்க்கஸ் என்ற பெயரில் வித்தை காட்டி, விபத்துகளில் சிக்குவதும் அதிகமாகி வருகிறது. இந்த பிள்ளைகள், ஹெல்மெட் போடாமல் போகிறார்களே என்று நினைத்து நாம் கவலைப்படுவதா?? அல்லது இப்போதே குடிபோதை, முத்தம், என்று நடுரோட்டில் சிக்கி அசிங்கப்படுகிறார்களே என்று நினைத்து கவலைப்படுவதா??












Click it and Unblock the Notifications