இப்படி கூட சாவு வருமா! திருமணத்தில் டான்ஸ் ஆடும் போதே சரிந்த 23 வயது இளம்பெண்! துடிதுடித்து பலி
இந்தூர்: உறவினரின் திருமண விழாவில் ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. திருமண விழாவில் பங்கேற்ற மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும், அது முடியாமல் போனது. இது தொடர்பான அதிர்ச்சி தரும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
முன்பெல்லாம் மாரடைப்பு, இதய செயலிழப்பு எல்லாம் வயதானவர்களுக்கு அல்லது இணை நோய் இருப்போருக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இப்போது வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமே ஏற்படுகிறது.

ஷாக் சம்பவம்:
சின்ன சின்ன குழந்தைகள், இளைஞர்கள் கூட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. அப்படியொரு சோகமான சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குத் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென இதய செயலிழப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடனமாடும் போது உயிரிழப்பு:
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ரிசார்ட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது பெண் ஒருவர் நடனமாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தூரில் வசிக்கும் அந்த பெண் 23 வயதே ஆன பரினிதா ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விதிஷா மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட 'ஹல்டி' விழாவில் பரினிதா மேடையில் நடனமாடும் போது திடீரென அப்படியே சரிந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
மருத்துவர்கள் முயன்றும் முடியவில்லை:
திருமண விழாவில் சில மருத்துவர்களும் பங்கேற்றுள்ளனர். இளம் பெண் மயங்கிய உடனே அவர்கள் உதவிக்கு விரைந்துள்ளனர். சிபிஆர் கொடுத்து அந்த பெண்ணை டாக்டர்கள் காப்பாற்ற முயன்றனர். இருந்த போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து
உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அங்கும் அவரை காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். எம்பிஏ பட்டதாரியான பரினிதா, இந்தூரில் உள்ள தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்குக் தம்பி ஒருவர் இருந்துள்ளார். ஆனால், அவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு 12 வயதில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
முதல்முறை இல்லை:
அதேநேரம் மத்தியப் பிரதேசத்தில் இதுபோல பொது நிகழ்ச்சிகளில் நடனமாடும் போது உடல்நலக்குறைவால் உயிரிழப்பு ஏற்படுவது இது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அகர்- மால்வா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தான். அதேபோல இந்தூரில் யோகா நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹார்ட் அட்டாக் & இதய செயலிழப்பு:
இங்கு நாம் இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது இவர்களுக்கு ஏற்பட்டது மாரடைப்பு இல்லை இதய செயலிழப்பு.. அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் heart attack இல்லை.. cardiac arrest காரணமாகவே இவர்கள் உயிரிழந்தனர். நம்மில் பலரும் இரண்டும் ஒன்று என நினைத்து வருகிறோம். ஆனால், இரண்டும் ஒன்று இல்லை.
மாரடைப்பு என்பது தமனிகளில் அடைப்பு மற்றும் உறைதல் ஆகியவை காரணமாக ஏற்படுகிறது. அதேநேரம் இதய செயலிழப்பு இதயத்தின் எலக்டிரிக் இம்பள்ஸ் (electrical impulses) தடைப்படுவதால் ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும் போது சிகிச்சை அளிக்கக் கூடுதல் டைம் கிடைக்கும். ஆனால், இதய செயலிழப்பு ஏற்படும் போது சில நிமிடங்களில் சரியான சிகிச்சை அளித்தாக வேண்டும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications