வட மாநிலங்களில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்; டெல்லியில் ரயில்கள் ரத்து !
டெல்லி: பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும் ரயில் போக்குவர்த்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பெரும்பாலான இடங்களில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர், அலுவலகம் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். லூதியானா நகரில் 8 டிகிரி செல்வியஸ் வெப்பநிலை நேற்று பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது. இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று காலையில் டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இதைப்போல கடும் பனிமூட்டத்தால் காலை 5.30 மணியளவில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையே மக்களால் பார்க்க முடிந்தது. இது 8.30 மணியளவில் 400 மீட்டராக அதிகரித்தது. இந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்தது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு வந்த 10 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications