கேரளத்தில் புரட்சித் திருமணம்: திருநங்கையை மணந்த திருநம்பி
கேரளத்தில் திருநங்கையை பெற்றோர் சம்மதத்துடன் மணந்தார் திருநம்பி.
திருவனந்தபுரம்: கேரளத்தில் முதல் முறையாக திருநங்கையை பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் திருமணம் செய்து கொண்டு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இஷான் கே ஷான், சூர்யா ஆகிய இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சூர்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இஷான் கே ஷான் தொழில் செய்து வருகிறார்.

இஷான் , கடந்த 2014- ஆம் ஆண்டு பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூர்யாவும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்த இவர்கள் இருவரும் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கிக் கொண்டனர். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடந்தது.
இரு வீட்டார் கலந்து கொண்டு இவர்களது திருமணத்தை கோலாகலமாக்கினர். வாக்காளர் அடையாள அட்டைகளிலும் சூர்யா பெண் என்றும் , இஷான் ஆண் என்றும் உள்ளதால் இவர்களது திருமணத்தில் சட்டரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை.
இவர்களது திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. முதல்முறையாக திருநங்கை ஒருவரும் திருநம்பி ஒருவரும் திருமணம் செய்து கொண்டு கேரளத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications