Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவனை கடைக்கு அனுப்பிவிட்டு.. மனைவியை பலாத்காரம் செய்த நண்பர்கள்.. 1.5 கி.மீ தூர அரை நிர்வாண அவலம்

Subscribe to Oneindia Tamil

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில், தாஜ்பூரைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணை இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர், சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் அரை நிர்வாணமாக ஓடியுள்ளார். போலீசாரை கண்டு குற்றவாளிகள் தப்பியோடிய போது அவர்கள் கால்கள் உடைந்தன. இந்த பகீர் பலாத்கார சம்பவம் குறித்த விவரம் இதுதான்..

திண்டோரியைச் சேர்ந்தவர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணாகும். அவருக்கு வயது 20. வேலை தேடி கடந்த புதன்கிழமை மாலை தனது கணவருடன், மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைனி நகருக்கு வந்தார். அவர்கள் இந்திரா நகர் கிராசிங் பகுதியில் யாதவ் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ரவி என்பவரை சந்தித்து வேலை கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரவி மனதில் அந்த பெண்ணைப் பார்த்து காம சபலம் தோன்றியுள்ளது. இதையடுத்து ஒரு சதித் திட்டம் போட்டார். பிபாலியா பிச்சியா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு வருமாறு கணவன்-மனைவியை ரவி அழைத்துள்ளார். இதையும் அந்த தம்பதி நம்பிவிட்டனர்.

பண்ணை வீட்டுக்கு போன பிறகு, அங்கு உள்ள தனது வீட்டை சுத்தம் செய்யுமாறு அந்த பெண்ணிடம் சொன்ன ரவி, அந்தப் பெண்ணின் கணவரை நைசாகக் கூட்டிக் கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்கப் போய்விட்டார். அவர்கள் சென்ற பிறகு, ​தகவல் தெரிந்த, ​ரவியின் நண்பர் இம்மா என்ற இம்ரான் அங்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே கணவரை ஊருக்கு வெளியே ஏதோ ஒரு வேலை கொடுத்து நிறுத்திவிட்டு ரவியும் விரைந்து அந்த வீட்டுக்கு வந்தார். தனது நண்பன் பலாத்காரம் செய்த அந்த பெண்ணை ரவியும் பலாத்காரம் செய்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தப்பித்து, கொஞ்சம் தூரத்தில் இருந்த சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை நோக்கி அலறியபடியே அரை நிர்வாணமாக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினார். இதைப் பார்த்த தொழிலாளர்கள் அந்த பெண்ணுக்கு ஓடி வந்து போர்வையை போர்த்தினர். பன்வாசா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரவீந்திர கட்டரே, பெண் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

இந்த பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாலும், அவர் பேசிய மொழி புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்ததாலும் குற்றவாளிகளை தேடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் புரிந்து கொண்டு இம்ரான் மற்றும் ரவி தேடினர். சுமார் 19 பேரை பிடித்து விசாரித்தனர்.

ஸ்ரீ சிந்தடிக் காடு அருகே போலீசார் ரவி மற்றும் இம்ரான் பதுங்கியிருப்பதை அறிந்து சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்த இருவரும் தப்பி ஓட முயன்றனர், ஆனால் கீழே விழுந்து, அவர்கள் கால்கள் உடைந்தன. சிகிச்சைக்கு பிறகு சிறையில் அடைத்தனர் போலீசார்.இந்த சம்பவம் 10 மாதங்களுக்கு முன்பு உஜ்ஜயினியில் ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட 12 வயது சிறுமி சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அந்த சிறுமி ரத்தம் வழிய, அரை நிர்வாண நிலையில் உதவி கேட்டு 8 கிலோமீட்டர் தூரம் அலைந்தார். அந்த வழக்கு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு கொடூரம் ம.பி.யில் அரங்கேறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+