தேர்தல் அதிகாரிகளை அடித்து உதைத்த மமதா கட்சி தொண்டர்கள்!
கொல்கத்தா: தேர்தல் ஆணையத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் தேர்தல் அதிகாரிகளை அடித்து துவைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அப்படியெல்லாம் மாற்ற முடியாது.. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் மமதா மிரட்டல் விடுத்தார்.
இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர் ஒருவழியாக அடிபணிந்தது மேற்குவங்க அரசு.
தற்போது மேற்கு மாநிலத்தின் மால்டா மாவட்டத்தின் மாணிக்சாக் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அந்த அதிகாரிகளை அடித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தேர்தல் கமிஷ்ன் அறிக்கை கேட்டுள்ளது. மேலும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும், எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சர் சாப்த்ரி மிர்ஷா மற்றும் மால்டா தொகுதி வேட்பாளர் ஹூசேன் முன்னிலையில்தான் இந்த களேபரம் அரங்கேறி இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications