கோஷ்டி மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பலி.. நள்ளிரவில் நடந்த கொடூரம்.. மேற்கு வங்கத்தில் ஷாக்!
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர், மோதலில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பகுயாட்டி அர்ஜுன்பூர் பகுதியில் நேற்று இரவு இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு குழுவினர் மற்றொரு பகுதியின் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து அங்கு போலீசார் வந்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கிருந்து சென்றதும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செங்கல் மற்றும் கட்டைகளால் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதல் படுகாயம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சஞ்சீவ் தாஸ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலில் பலியான சஞ்சீவ் தாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இது திட்டமிடப்பட்ட கொலை எனக் கூறி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஆனந்தபூர் பகுதியில் பாஜக பெண் நிர்வாகியான சரஸ்வதி சர்க்கார் என்பவர் நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலில் தலையில் காயமடைந்த சரஸ்வதி சர்க்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications