யூசுப் பதான் ‛அவுட்'.. வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் மம்தா மருமகனுக்கு இடம்!
கொல்கத்தா: நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இதனை தவிடு பொடியாக்கவும், ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் எம்பிக்கள் குழுவில் இடம்பெற்றிருந்த யூசுப் பதானுக்கு பதில் மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை சேர்த்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.. இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. பதிலுக்கு நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்துவதாக நம் நாடு அறிவித்தது.
நம் நாட்டின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் மண்டியிட்டு கெஞ்சி சண்டையை நிறுத்தினாலும் கூட வீராப்பாக பேசி வருகிறது. நம் நாட்டின் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்ததாக போலியான செய்திகளை பரப்பி வருகிறது. அதோடு பாகிஸ்தான் நம்நாட்டின் விமானப்படை தளங்களை அழித்தாகவும் வீராப்பாக கூறி வருகிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் அப்பாவிகள் மற்றும் மசூதிகளை குறிவைத்து தாக்கியதாக நம் நாட்டின் மீது அவதூறு பரப்பும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாட்டின் தலைவர்களுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது இதற்காக 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு காங்கிரஸின் சசிதரூர், திமுகவின் கனிமொழி, பாஜகவின் ரவி சங்கர் பிரசாத் எம்பி, பைஜெயந்த் பாண்டா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகண்ட் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டவர்கள் குழுக்களை வழிநடத்த உள்ளனர். இதில் ஒவ்வொரு குழுக்களிலும் 5 முதல் 6 எம்பிக்கள் வரை இடம்பெற்றுள்ளதோடு, தூதர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த குழு வரும் 22ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பியுமான யூசுப் பதானுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழுவில் யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இந்த குழுவினர் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் யூசுப் பதான் அந்த குழுவுடன் சேர்ந்து செயல்படமாட்டார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதாவது அனைத்து கட்சி குழுவில் இடம்பெறும் எம்பிக்கள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் மத்திய அரசு எந்த ஆலோசனையும் செய்யவில்லை. சுயமாக செயல்பட்டு யூசுப் பதானை அந்த குழுவில் சேர்த்துள்ளனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யூசுப் பதான் உள்பட யாரும் அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவுடன் சேர்ந்து செயல்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு யூசுப் பதான் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தான் யூசுப் பதானுக்கு பதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், ‛பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உலகளாவிய நடவடிக்கைக்கான அனைத்து கட்சி குழுவில் திரிணாமுல் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்த எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி ஜிஎஸ் அபிஷேக் பானர்ஜியை பரிந்துரைத்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகம் ஒன்றுபட வேண்டிய நேரத்தில் அபிஷேக் பானர்ஜியின் இணைப்பு நம்பிக்கை அளிக்கிறது. அவரது இருப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான மேற்கு வங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் கூட்டுக் குரலை வலுப்படுத்தவும் உதவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications