திரிபுராவில் 6,518 வாக்குகளில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்த இடதுசாரிகள்
திரிபுராவில் 6,518 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது சிபிஎம்.
அகர்தலா: திரிபுராவில் 0.3% வாக்கு வித்தியாசத்தில் அதாவது வெறும் 6518 வாக்குகளில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்திருக்கின்றனர் இடதுசாரிகள்.
திரிபுராவில் 25 ஆண்டுகாலம் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வந்தது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. பாஜகவுக்கு அமைப்பு பலம் கூட இல்லாத நிலைதான் 5 ஆண்டுகளுக்கு முன்னர்.
கடந்த 4 ஆண்டுகாலமாக பாஜக, திரிபுராவில் வேர்பிடித்துவிட்டது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் என அப்படியே வளைத்து போட்டு பாஜகவாக உருவெடுத்தது.

பழங்குடிகள் ஓட்டுகள்
அத்துடன் தேர்தலில் தனிநாடு கோருகிற பூர்வகுடிகள் கட்சியுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டது. இதனால் பழங்குடி மக்களின் வாக்குகளும் காங்கிரஸின் வாக்கு வங்கியும் பாஜகவுக்கு மடை மாறின.

இடதுசாரிகள் சரித்திரத்துக்ககுசெக்
இதனால் பாஜக, திரிபுராவில் இடதுசாரிகளின் சரித்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. நிச்சயம் பாஜக விஸ்வரூபமெடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

9,99,093 வாக்குகள்
அதேநேரத்தில் வாக்கு சதவீத வித்தியாசம் என்று பார்த்தால் பாஜக 43.0% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது மொத்தம் 9,99,093 வாக்குகளை தனித்து பெற்றிருக்கிறது பாஜக.

6,518 வாக்குகள் வித்தியாசம்
இடதுசாரிகள் வாக்கு வங்கியும் பெரிய சரிவை எதிர்கொள்ளவில்லை. இடதுசாரிகள் 42.7% வாக்குகள் பெற்றுள்ளனர். மொத்தம் 9,92,57 வாக்குகள் இடதுசாரிகளுக்கு கிடைத்தும் இடங்கள் போதுமானதாக இல்லை. பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்குமான வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 6,518 வாக்குகள் மட்டுமே.

பின்னடைவை சந்தித்த இடதுகள்
இருப்பினும் அமைப்பே இல்லாத பாஜக இப்படி ஒரு விஸ்வரூபத்தைக் கொடுக்கும் என்பதை இடதுசாரிகள் எதிர்பார்க்கவில்லை. அதனால் இடதுசாரிகளுக்கு இது பின்னடைவுதான்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!











Click it and Unblock the Notifications