For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷாவின் 'ஓவர்சீஸ்' பிளான்.. நேபாள், இலங்கை டார்கெட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Google Oneindia Tamil News

திரிபுரா: அகர்தலாவில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறியுள்ளார்.

மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பாஜக, தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் பலமான சிறுபான்மையினர் வாக்குகளை குறி வைத்து காய் நகர்த்தி வரும் பாஜக, இப்போ இல்லன்னா.. எப்பவும் இல்ல மோடில் வேலை செய்து வருகிறது.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 170க்கு விற்பனை - வெங்காயம் போடாமல் சாம்பார் வைக்க இல்லத்தரசிகள் முடிவுசின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 170க்கு விற்பனை - வெங்காயம் போடாமல் சாம்பார் வைக்க இல்லத்தரசிகள் முடிவு

இந்நிலையில், திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறியுள்ளார்.

 ஆட்சியை விரிவுப்படுத்த

ஆட்சியை விரிவுப்படுத்த

இது தொடர்பாக அவர் பேசுகையில், "உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவராக இருந்தபோது, அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்" என்று கூறினார்.

 ஜனநாயக விரோதம்

ஜனநாயக விரோதம்

திரிபுரா முதல்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசியிருக்கும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

 துரதிர்ஷ்டவசமானது

துரதிர்ஷ்டவசமானது

இது அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையிடும் செயல். இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாதிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வரிடம் இருந்து இதுபோன்ற கருத்துகள் வெளிவருவது துரதிர்ஷ்டவசமானது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

 இது லிஸ்ட்லயே இல்லையே

இது லிஸ்ட்லயே இல்லையே

அதெப்படி பாஜக மற்ற நாடுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்? வாக்குறுதிகள் கொடுக்கலாம், அதற்காக இப்படியா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே? என்று முதல்வரின் இந்த பேச்சு குறித்து பல கிண்டல் டிவீட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Tripura CM biplab dev about BJP - இலங்கை நேபாளத்தில் பாஜக
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X