பண மெத்தையில் படுத்துப் புரண்ட சிபிஎம் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்

அந்தத் தலைவரின் பெயர் சமர் ஆச்சார்ஜி. இவர் அகர்தலாவின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினராக இருந்தவர். இவருக்கு ஒரு சின்னச் சின்ன ஆசை.. அதாவது படுக்கையில் பணத்தாள்களைப் போட்டு அதன் மேல் தூங்க வேண்டும் என்று.
இதையடுத்து தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்த அவர் அதை படுக்கையில் போட்டு புரண்டு புரண்டு சந்தோஷப்பட்டார்.
இதை வீடியோவிலும் பதிவு செய்திருந்தார். ஆனால் இது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த வீடியோவில், நான் ரூ. 20 லட்சம் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தேன். எனது ஆசைப்படி இப்போது படுக்கையில் பணத்தைப் போட்டு அதில் படுத்து சந்தோஷப்படுகிறேன் என்று கூறியிருந்தார் சமர்.
மேலும் அவர் கூறுகையில், மற்ற தலைவர்களைப் போல நான் பொய் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பணம் உள்ளதையும் மறைக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இது பரபரப்பைக் கூட்டியது. இன்த விவகாரம் குறித்து சிபிஎம் கட்சி விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியில், தற்போது சமரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பிஜன் தார் கூறுகையில், இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. இது கட்சியின் கொள்கைக்கு விரோதமானது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications