ஆள் வைத்து 'விபச்சாரம்' நடத்துகிறார் ராதே மா... மாடல் அழகியின் பரபரப்புப் புகார்
டெல்லி: கூலிக்கு ஆட்களையும், பெண்களையும் வைத்து விபச்சாரம் நடத்தி வருகிறார் ராதே மா என்று சர்ச்சைக்குரிய மாடல் அழகி அர்ஷி கான் கூறியுள்ள குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராதே மாவின் ஏஜென்ட் ஒருவர் தன்னை அணுகி தங்களுடன் இணைந்து செயல்படுமாறு அணுகியதாகவும் அர்ஷி கான் கூறியுள்ளார்.
ராதே மாவை சர்ச்சைகள் பின் தொடர்ந்து வருவதால் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதில் கூடுதல் பரபரப்பைச் சேர்த்துள்ளார் அர்ஷி கான்.

என்னைக் கூப்பிட்டார்கள்
அர்ஷி கான் இதுகுறித்துக் கூறுகையில், என்னிடம் ராதே மாவின் ஏஜென்ட் ஒருவர் வந்தார். தங்களது தொழிலில் என்னையும் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

மிரட்டல்
ஆனால் அதை நிராகரித்து அவரை அனுப்பி விட்டேன். இதையடுத்து எனக்குத் தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நான் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் அர்ஷி கான்.

அப்ரிதியுடன் இணைத்துப் பேசப்பட்டவர்
அர்ஷி கான் சர்ச்சைகளுக்குப் புதிதானவர் அல்ல. முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியுடன் இணைத்துப் பேசப்பட்டவர் இவர். மேலும் போஜ்பூரி படத் தயாரிப்பாளர் ஒருவர் கண்ட இடத்தில் தனது உடலில் கை வைத்ததாக கூறி பளார் என அறை விட்டு பரபரப்பைக் கிளப்பியவர்.

டிவி நடிகையும் புகார்
இதற்கு முன்னதாக டிவி நடிகை டோலி பிந்த்ரா என்பவர், தன்னை வேறு ஒரு சம்பந்தம் இல்லாத நபருடன் இரவைக் கழிக்குமாறு ராதே மா கேட்டுக் கொண்டதாக புகார் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
வழக்குப் பதிவு
இந்த விவகாரம் குறித்து பொரிவலி காவல் நிலைய போலீஸார் கூறுகையில்,டோலி பிந்த்ரா புகார் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் ராதே மா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications