வலுக்கட்டயமாக பெண்ணை முத்தமிடுவது குற்றமில்லையா?.. வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு
டெல்லி : பெண்ணை பலவந்தமாக கட்டிப்படித்து முத்தம் கொடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியின் கன்னாட்பிளேஸ் பகுதியில் பட்டப்பகலில் பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிட முயற்சித்த நபரின்மீது வழக்கு பதிவுசெய்ய மறுத்தது வேதனையளிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முகநூல் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி ராதிகா பி சிங் என்ற பெண் கூறியுள்ளதாவது..

நிகில் என்கிற அந்த நபர், டெல்லியின் பிரபல பகுதியில் ஒரு பெண்ணை முத்தமிட முயன்றபோது, அக்கம்பக்கத்தில் சென்றவர்களின் உதவியுடன், அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார் எனது தோழி.
தகவல் கொடுத்த 40 நிமிடம் கழித்து அங்கே வந்து சேர்ந்த போலீசார், அவரைக் கைது செய்யாமல், அவரிடம் தனியாக பேசியிருக்கின்றனர். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் கடிதம் எழுதித் தரும்படி கேட்டிருக்கின்றனர்.
எனினும், அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் சஞ்ஜீவ் குமார் எனது தோழியின் புகாரை தெளிவாக இல்லை எனக் கூறி இரு முறை நிராகரித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட தோழியின் தொலைபேசி எண்ணை, நிகிலின் பெற்றோரிடம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி, ராதிகா பி சிங், சர்ச்சைக்குள்ளான நிகிலின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications