திருப்பதியில் மார்கழி பூஜை: டிச.16 முதல் சுப்ரபாத சேவை ரத்து
Subscribe to Oneindia Tamil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத சேவை நடத்தப்படுவது உண்டு.
தனூர் எனப்படும் மார்கழி மாதம் வருகிற 16-ந் தேதி பிறக்கிறது. இதையடுத்து 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி வரை சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு மார்கழி மாதம் பிறப்பில் பவுர்ணமி வருவது சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தகவலை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி சீனிவாசராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications