"சின்னம்மா"வுக்கு ஸ்பெஷல் வசதிகளை சீரும் சிறப்புமாக செய்தவர் தினகரனின் நண்பராமே!

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் டிடிவி தினகரனின் நண்பர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறையில் சொகுசாக வாழ்ந்து வரும் தகவல்களும், ஹாயாக ஷாப்பிங் சென்றுவிட்டு சென்ற வீடியோ காட்சிகளும் வெளியாகின.

இதனால் கர்நாடகா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிறை முறைகேடுகள் குறித்து விசாரணை அதிகாரி வினய் குமார் விசாரணை நடத்தி வருகிறார். ஆனால் அதற்குள் இன்றும் இரு வீடியோக்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.

 சிறை மாற்றம்

சிறை மாற்றம்

கடும் நெருக்கடி காரணமாக சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சசகிலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

 உதவியவர் யார்

உதவியவர் யார்

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைக்க, கர்நாடகத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் உதவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் தும்கூருவைச் சேர்ந்தவர்.

 தினகரனுக்கு நெருக்கம்

தினகரனுக்கு நெருக்கம்

அவர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வருகிறார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பை நடத்தி வருகிறார். அவர் அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.

 மாத ஊதியமாக லஞ்சம்

மாத ஊதியமாக லஞ்சம்

இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்து சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க உதவியுள்ளார். மேலும் அவர் மூலமாகத்தான் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கைமாறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் சிலருக்கு மாத சம்பளத்தைபோல் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+