ஜெ. இடத்தை பிடிப்பாரா டிடிவி.தினகரன்?
இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி.தினகரனை முதல் குற்றவாளியாக சேர்க்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி.தினகரனை முதல் குற்றவாளியாக சேர்க்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் இடத்தை டிடிவி தினகரன் பிடிப்பார் என தெரிகிறது.
முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த 4 நாட்களாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி போலீஸார் தினகரனை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தினகரனின் நண்பரான பெங்களூருவைச் சேர்ந்த மல்லிகார்ஜூனாவும் தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
37 மணி நேரம் விசாரணை
இரட்டை இலைச்சின்னத்தை பெற 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை முதற்கட்டமாக கொடுத்ததாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் தினகரனிடம் டெல்லி போலீஸார் சுமார் 37 மணி நேரம் விசாரணை நடத்தி வந்தனர்.
டிடிவி தினகரன் அதிரடி கைது
இதில் சுகேஷை யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறிய டிடிவி.தினகரன் பின்னர் சுகேஷிடம் பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முதல் குற்றவாளியா?
தினகரனை கைது செய்துள்ள டெல்லி போலீஸ் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் டிடிவி.தினகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா தான் முதல் குற்றவாளி
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏ1 அதாவது முதல் குற்றவாளி என்றும் அவரது தோழியும் டிடிவி.தினகரனின் சின்னம்மாவுமான சசிகலா இரண்டாவது குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டிடிவி.தினகரனே மூலக்காரணம்
இந்நிலையில் ஜெயலலிதா விட்டுச்சென்ற முதல் குற்றவாளி என்ற இடத்தை நிரப்பும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி.தினகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. லஞ்சக் குற்றத்துக்கு டிடிவி.தினகரனே மூலக்காரணம் என்பதால் அவர் தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications