7 கோடி கணக்குகளின் கதை முடிந்தது.. பொய்யான கணக்குகளை முடக்கும் டிவிட்டர்.. காரணம் என்ன?
டிவிட்டரில் இருக்கும் பொய்யான 7 கோடி கணக்குகள் கடந்த இரண்டு மாதத்தில் முடக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: டிவிட்டரில் இருக்கும் பொய்யான 7 கோடி கணக்குகள் கடந்த இரண்டு மாதத்தில் முடக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் நிறைய பொய்யான ஐடிக்களை முடக்கும் பணி நடந்து வருகிறது.
தவறான தகவல்கள், பொய்யான தகவல்கள் இணையத்தில் பரவுவதுதான் இப்போது மிகப்பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. ஒரே ஒரு பொய்யான வாட்ஸ் ஆப் மெசேஜால் இந்தியாவில் மட்டும் 30 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பேஸ்புக்கும் பொய்யான தகவல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் இதில் டிவிட்டர் மட்டும் கொஞ்சம் அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கணக்கு பொய்யா
ஆனால் டிவிட்டர் இதில் பெரிய நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது. 2 மாதங்களுக்கு முன்பே டிவிட்டர் இந்த நடவடிக்கையை எடுக்க தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக, பொய்யான கணக்குகளை தேடி,தேடி நீக்கி வருகிறது. திடீர் என்று ஒரு கணக்கில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, ஒரு கணக்கு பொய்யான கணக்கா என்று கண்டுபிடித்து வருகிறார்கள்.

சிறந்த உதாரணம்
அதேபோல் சில பிரபலங்களுக்கும் அதிக பொய்யான பாலோவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக பிரதமர் மோடிக்கு 4,03,00,000 பேரில் 2,41,80,000 பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். உலகிலேயே சதவிகிதப்படி மோடிதான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவருக்கு மொத்தம் 60 சதவிகிதம் பேர் பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

எவ்வளவு பொய்யான கணக்கு
மொத்தம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 7 கோடி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தினமும் 10 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவிலும் மிகவும் அதிக அளவில், கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் இன்னும் அதிக அளவில் கணக்குகள் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மிகவும் அதிக அளவில் குறையும்
இதனால் சிலருக்கு டிவிட்டரில் பாலோயர்கள் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் குறையும் என்று கூறப்படுகிறது. சிலருக்கு சராசரியாக 4ல் இருந்து 5 பின்தொடர்பாளர்கள் குறைவார்கள் என்று டிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது. டிவிட்டர் நிறுவனம் இந்த தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications