சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாங்க 'பேஸ்புக்கர்கள்'.. இதை விடுவாங்களா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேஸ்புக்கில் இருப்பவர்களுக்கு இப்போது ஏதாவது சாக்கு கிடைத்து விட்டால், அல்லது வாகாக யாராவது கிடைத்து விட்டால் போதும்.. சும்மா நக்கலடித்து, கிண்டலடித்து, கேலி செய்து கிழி கிழியென்று கிழித்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி நிறையப் பேர் பெரும் சேதாரத்தை சந்தித்துள்ளனர். லேட்டஸ்டாக ராகுல் காந்தி இவர்களிடம் சிக்கி துவைபட்டு தற்போதுதான் விடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து நடந்த மிளகுத் தூள் வீச்சை வைத்து கிண்டல்காரர்கள் ஃபுல் பலத்துடன் கிளம்பி விட்டனர்.

மீரா ஜாஸ்மினா.. மீரா குமாரா...

மீரா ஜாஸ்மினா.. மீரா குமாரா...

லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை ஏற்கனவே சரமாரியாக கேலி செய்த அனுபவம் நம்மவர்களுக்கு நிறையவே உண்டு.

ஆப் பைட்டியே... ஜி..ஜி

ஆப் பைட்டியே... ஜி..ஜி

லோக்சபாவில் அவர் சபையை நடத்தும்போது நார்மலாக பேசியதை விட அப்நார்மலாக பிரச்சினையைக் கிளப்புபவர்களை உட்கார வைக்க படும்பாடுதான் ரொம்ப அதிகம்.

சுனோ.. சுனோ...

சுனோ.. சுனோ...

அவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் இந்த சுனோ, பைட்டியே, ஆப் பைட்டியே, அச்சா ஆகியவையாகத்தான் இருக்கும்ம். வேறு எதையுமே அவரை அதிகம் பேச விடாத அளவுக்கு சத்தம் ஜாஸ்தியாகவே இருக்கும் பெரும்பாலும்.

இப்படிப்பட்ட மீரா குமாருக்கு வந்த சோதனை

இப்படிப்பட்ட மீரா குமாருக்கு வந்த சோதனை

இப்படிப்பட்ட மீரா குமார் நேற்று பெரும் சோதனையைச் சந்தித்து விட்டார் லோக்சபாவில். ஒருபக்கம் பேப்பரைப் பறித்தார்கள். இன்னொரு பக்கம் மிளகுத் தூளை வீசினார்கள்.. எப்படி சமாளிக்க அவர் கஷ்டப்பட்டிருப்பார் மீரா என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதை வைத்து ஒரு காமெடி

இதை வைத்து ஒரு காமெடி

இந்த நிலையில் இந்த சமயத்தில் மீரா குமார் லோக்சபாவில் எப்படி ரியாக்ட் செய்திருப்பார் என்பதை போலியான ஒரு கூகுள் டூடுலைப் போட்டு கிண்டலடித்துள்ளனர் டிவிட்டரில்.

அச்சா ஜி...

அச்சா ஜி...

எப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில் போய் சிக்கியிருக்கிறார் பாருங்கள் நம்ம மீரா குமார்.

அரே ஹமாரா சச்சின் பய்யா.. ஆராஹே...

அரே ஹமாரா சச்சின் பய்யா.. ஆராஹே...

இப்படி மீரா குமாரைப் போட்டு வாரிய நிலையில் நம்ம கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, சச்சின் டெண்டுல்கரின் ஒரு ஜாலிப் படத்தைப் போட்டு அவர் பங்குக்கு நாறடித்துள்ளார். அந்தப் படத்தில் சச்சின் டெண்டுல்கர் மாஸ்க் அணிந்தபடி நாடாளுமன்றத்திற்கு வருவது போல உள்ளது.

மொளகாப் பொடியே வீசினாலும்.. கில்லி மாதிரி நிப்போம்ல

மொளகாப் பொடியே வீசினாலும்.. கில்லி மாதிரி நிப்போம்ல

இப்படி நாடாளுமன்றத்துக்குள் மிளகுப் பொடியைத் தூவி எம்.பிக்கள் விளையாடிய ஆட்டம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். அது சரி, மிளகாய்ப் பொடியே தூவினாலும் விடாமல் போராடி நமது ஜனநாயகத்தை கட்டிக் காப்பாட்டி கரை சேர்த்து விட மாட்டோமா என்ன...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+