அட கொடுமையே.. ஒரு பையனுக்காக.. பிளஸ் டூ மாணவிகள் 2 பேர் நடு ரோட்டில் கொண்டையை பிடித்து இழுத்து சண்டை
விசாகபட்டினம்: பள்ளி பருவத்தில் காதல் வயப்படுவது இயல்பு. அப்போது ''நான் பார்க்கும் பெண்ணை நீ ஏன் பாக்கிறாய்'' என்று இரண்டு மாணவர்கள் விளையாட்டுக்கு சண்டையிட்டு கொள்வதும் அவ்வப்போது நடக்கும்.
Recommended Video
ஆனால் ஒரு இளைஞருக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்வதை பார்த்து இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இப்போது பார்க்க போகிறோம்.

ஒரு மாணவன்; இரண்டு மாணவி
ஆந்திர மாநிலம் அனகாபல்லி பகுதியில் வெவ்வேறு பள்ளியில் படிக்கும் 12 ம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். மாணவிகள் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அனகாபல்லி பகுதியில் அந்த இளைஞருடன் இந்த இரண்டு பேரில் ஒரு மாணவி சென்றுள்ளார்.

சண்டையாக மாறியது
அந்த இளைஞரை காதலிக்கும் இன்னொரு மாணவி இதனை பார்த்து விட்டார். அடுத்து நிகழ்ந்துதான் தரமான சம்பவம் ''எனது காதலனுடன் நீ எப்படி செல்லலாம்'' என்று இந்த மாணவி கேட்க, '' இவர் எனது காதலன் நான் அப்படிதான் செல்வேன்'' என்று அந்த மாணவி பதில் கூற இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.

குடிமிப்பிடி சண்டை
நடுரோடு என்றும் கூட பாராமல் இரு மாணவிகளும் கடுமையாக சத்தம் போட்டு ஒருவரையொருவர் சரமாரியாக அடித்துக்கொண்டனர். சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் அதனை சட்டை செய்யாமல் குடிமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். இதனை பார்த்து அங்கு கூடியவர்களுக்கு இந்த சண்டையை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியவில்லை. ''சண்டையை நிறுத்துங்கள்'' என்று ஒரு சிலர் கூறி பார்த்தும் இரு மாணவிகளும் கண்டு கொள்வதாக இல்லை.

போலீசார் எச்சரிக்கை
இதனால் விஷயம் போலீஸ் வரை சென்று விட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு மாணவிகளையும் அப்படியே போலீஸ் நிலையம் அழைத்து சென்று கடுமையாக எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அந்த இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications