தேசிய கீதத்தை அவமதித்த 2 பத்திரிக்கையாளர்கள் ராணுவ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அமர்ந்திருந்த 2 பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த பிடிபி தலைவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான செய்யது பஷாரத் அகமது கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின்போது தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த 2 பத்திரிக்கையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.
இதையடுத்து ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார்.
வெளியேற்றப்பட்ட பத்திரிக்கையாளர்களில் ஒருவரான காஷ்மீர் ரீடர் செய்தியாளர் ஜுனைத் பஸாஸ் கூறுகையில்,
நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க தான் ராணுவம் எங்களை அழைத்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நான் செய்திக்கு குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு என்னிடம் வந்த கர்னல் பர்ன் நான் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி அங்கிருந்து வெளியேறச் சொன்னார் என்றார்.
வெளியேற்றப்பட்ட மற்றொரு பத்திரிக்கையாளர் ரைசிங் காஷ்மீர் செய்தித்தாளை சேர்ந்தவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications