காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: 2 தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பலியானார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அந்த பகுதியில் இந்திய ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications