ராஜஸ்தானில் 2 பழங்குடி இன மைனர் சகோதரிகள் பாலியல் பலாத்காரம்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மைனர் சகோதரிகள் இருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே இனத்தைச் சேர்ந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள குண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமிகள் இருவர், பைரா கிராமத்தில் கடந்த 6ம் தேதி மாலை பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அதே வழியாக வாகனத்தில் சென்ற வாலிபர்கள் மூவர் அச்சிறுமிகளை தாங்களே வீட்டில் கொண்டு போய் விடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அந்த வாலிபர்கள் சிறுமிகள் வசிக்கும் பகுதியிலேயே குடியிருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே பழக்கமாக அவர்களை நம்பி வாகனத்தில் ஏறியுள்ளனர் சிறுமிகள்.
ஆனால், சிறுமிகளை நேராக வீட்டிற்கு அழைத்துச் செல்லாத வாலிபர்கள் அவர்களை சைலா பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமிகள் நடந்ததை வீட்டில் தெரிவித்துள்ளனர். சிறுமிகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் இது தொடர்பாக சாடாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் ஒரு மைனர் சிறுவன் உட்பட மூன்று பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளுக்கு முறையே 15 மற்றும் 17 வயது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள படான் கிராமத்தில் இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது. இந்நிலையில் ராஜஸ்தானில் பழங்குடி இன சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications