அண்ணன் கண் முன்பாக 2 தங்கைகள் பலாத்காரம்- சிறுமிகளை சூறையாடிய 15 மனித மிருகங்கள்!
பாட்னா: பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்தின் சசாராம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய 2 மாணவிகள் அவர்களின் சகோதரருக்கு முன்பாகவே 15 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 மற்றும் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த மாணவிகள், சசாராம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு திரும்பும் வழியில் வரும் போது 15 பேர் கொண்ட கும்பல் மாணவியை சுற்றி வளைத்தனர். மாணவிகள் அலறியும் பயனில்லை. அம்மாணவிகள் இருவரும் அந்த கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் சொந்தக்காரர்களான அந்த மாணவிகளின் சகோதரர் ஒருவரின் முன்பே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு மாணவிகளும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தை நேரில் கண்ட அவர்களது சகோதரர் இந்த விஷயத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications