சித்தராமையாவோ, எடியூரப்பாவோ அல்ல.. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குமாரசாமி? சர்வே சொல்லும் சீக்ரெட்
Recommended Video

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக, இதுவரை வந்துள்ள இரு டிவி சேனல்களின் சர்வேக்களும் இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளன.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டியுள்ளது. ஆனால், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 13ம் தேதி வெளியான, இந்தியா டுடே சர்வே, மற்றும் நேற்று வெளியான ஏபிபி டிவி சர்வே இரண்டுமே இதைத்தான் ஆணித்தரமாக கூறுகின்றன.

இரு சர்வேக்கள்
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றே இந்தியா டுடே மற்றும் ஏபிபி டிவி சர்வேக்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும் என்று ஏபிபி சர்வேயும், காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று இந்தியா டுடேவும் தெரிவிக்கின்றன. இதில் மட்டுமே லேசான வேறுபாடு உள்ளது.

காங்கிரஸ், பாஜக வாய்ப்பு
உதாரணத்திற்கு, பாஜக 89-95 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு என்கிறது ஏபிபி சர்வே. காங்கிரஸ் கட்சி 90-101 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு என்கிறது இந்தியா டுடே சர்வே. இரண்டு சர்வேக்களுக்கும் நடுவே பெரிய அளவுக்கு தொகுதி கணிப்பில் வித்தியாசம் இல்லை என்பதை வைத்து பார்க்கும்போது கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மஜதவுக்கு வாய்ப்பு
அதேநேரம் இவ்விரு கருத்து கணிப்புகளிலுமே மதசார்பற்ற ஜனதாதளம் கணிசமான இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மஜத கட்சி தலைமையே எதிர்பார்த்திருக்காது என்பதுதான் கள நிலவரம். ஆனால், அக்கட்சி முதல்வர் வேட்பாளர் எச்.டி.குமாரசாமிக்கு மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு அதிகரித்துள்ளதே, அக்கட்சிக்கு இத்தனை சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாக காரணம் என்று தெரிகிறது.

கிங் மேக்கர் மஜத
மதசார்பற்ற ஜனதாதளம் 32-38 தொகுதிகளை வெல்லும் என்று ஏபிபி கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. மதசார்பற்ற ஜனதாதளம் 34-43 தொகுதிகளை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 113 சீட்டுகள். ஆனால் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே அந்த மேஜிக் நம்பரை தொடப்போவதில்லை என்பதே டிவி சேனல்களின் கருத்து கணிப்பாக உள்ளது.

முந்தைய கூட்டணிகள்
இந்த சூழ்நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம்தான் கிங் மேக்கர் கட்சியாக மாறப்போகிறது. அக்கட்சி யாருக்கு ஆதரவளிக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2006ம் ஆண்டு, தரம்சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவுக்கு ஆதரவளித்தது மதசார்பற்ற ஜனதாதளம். அப்போது குமாரசாமி முதல் 20 மாதங்களும், அடுத்த 20 மாதங்கள் பாஜகவின் எடியூரப்பாவும் முதல்வராக பதவி வகிப்பது என ஒப்பந்தம் போடப்பட்டது. முதல் 20 மாதங்கள் எடியூரப்பா துணை முதல்வராக பதவி வகித்தார். எனவே காங்., பாஜக இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்த அனுபவம் மஜதவுக்கு உள்ளது.

குமாரசாமிக்கே முதல்வர் பதவி
ஆனால், 20 மாதங்கள் கழித்து முதல்வர் பதவியை விட்டுத்தர குமாரசாமி மறுத்துவிட்டார். இதனால் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக. இதன்பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலிலும் தொங்கு சட்டசபை அமைந்தால், குமாரசாமியை முதல்வராக்கும் கட்சிக்கே ஆதரவு என மதசார்பற்ற ஜனதாதளம் கோரிக்கைவிடுக்கும் என்று தெரிகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் தன்னையே முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை குமாரசாமி முன் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாஜகவோ அல்லது காங்கிரசோ யார் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அடைமழை என்னவோ குமாரசாமி காட்டில்தான் என்கிறது கர்நாடக வட்டாரம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications