இறைச்சிக்காக பசுவை கொன்ற வழக்கு... 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக் கொன்ற இரண்டு பேருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீசார் நடத்திய சோதனையில், வீடொன்றில் இருந்து 30 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பசு மாட்டின் தோல் கண்டுபிடிக்கப் பட்டது.
இது தொடர்பாக, பசுவதை தடை சட்டத்தின் கீழ், முசாபர் நகர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரியாஸத், நஸிம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மனோஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications