சகோதரிகளை கடத்தி 4 மாதம் பலத்காரம் செய்த கயவன் - ராஜஸ்தானில் பயங்கரம்
ராஜஸ்தானில் இரண்டு இளம் பெண்களை கடத்திக்கொண்டு போய் அறையில் அடைத்து வைத்து பல மாதங்கள் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்துள்ளான் ஒரு கயவன். அவனிடம் இருந்து தப்பி வந்த சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்துள
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களை கடத்திக்கொண்டு போன கயவன் ஒருவன் இருவரையும் அறையில் அடைத்து வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக பலாத்காரம் செய்துள்ளான். அவனிடம் இருந்து தப்பி வந்த ஒரு சிறுமி போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜூலை 10ஆம் தேதியன்று காவல்நிலையத்திற்கு வந்த ஒரு சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். நரேஷ் குஜ்ஜார் என்ற அந்த கயவன் மார்க்கெட் போன தனது சகோதரியையும் தன்னையும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியன்று கடத்திக்கொண்டு போயிருக்கிறான். அறையில் அடைத்து வைத்து தொடர்ச்சியாக பலாத்காரம் செய்ததாக கூறி அழுதாள். தாங்கள் எங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்தோம் அது எந்த ஊர் என்று தெரியாது என்றும் கூறினாள்.

அவன் அசந்த நேரத்தில் அவனிடம் இருந்து ஜூலை 10ஆம் தேதியன்று தப்பி வந்து விட்டதாகவும் அவள் கூறினாள். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நரேஷ் குஜ்ஜார் மீது வழக்குப் பதிவு செய்த கஞ்சன்பூர் காவல்நிலைய போலீசார் சிறுமியின் சகோதரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.
மைனர் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த காரணத்தினால் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications