டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த 'நொய்டா'வில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள்- திடுக் தகவல்!
நொய்டா: டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவே நொய்டாவில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவன். மற்றொருவன் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவன்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளான ரகதுல்லா மற்றும் அப்துல் ஆசிஸிடம் உளவுத்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த இரு தீவிரவாதிகளிடம் மத்திய உளவுத்துறை நடத்திய விசாரணையில், டெல்லி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பிலும் இது தொடர்பான சதித் திட்ட விவரங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

தற்போது மேற்கு வங்க பயங்கரவாத தடுப்புப் படையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாநில புர்த்வான் குண்டுவெடிப்பில் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் மேற்கு வங்கத்திலும் சதித் திட்டங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில் தேசியப் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications