கொடூரம்! 12 வயது சிறுமி பலாத்காரம்.. "உடல் முழுக்க மோசமான காயங்கள்!" கோயில் பணியாளர்கள் இருவர் கைது
இந்தூர்: வெறும் 12 வயதே ஆன சிறுமி ஒருவரைக் கோயிலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் கொடூரமாகப் பலாத்காரம் செய்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக மைனர் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் சார்ந்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாட்னா மாவட்டத்தை அடுத்துள்ள மைஹார் நகரில் 12 வயது வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலாத்காரம்: அங்குள்ள 12 வயது சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது உடலில் கடித்ததால் ஏற்பட்ட காயங்களும், கொடூரமாகத் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களும் காணப்பட்டன. அங்குள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலில் பணிபுரியும் இருவர், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது
அந்த கொடூரன்கள் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடினமான பொருளைச் செருகியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே எந்தவொரு விஷயத்தையும் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் தகவல்: இந்தச் சம்பவம் குறித்து அம்மாவட்ட எஸ்பி அசுதோஷ் குப்தா கூறுகையில், "இதில் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். அவர்கள் 12 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் கடினமான பொருள் செருகியுள்ளனர் என்பதை நான் மறுக்கவில்லை. இருப்பினும், இதை நம்மால் மருத்துவ சோதனைக்குப் பின்னர் மட்டுமே உறுதி செய்ய முடியும். மருத்துவ அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை.
அந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. அந்த சிறுமியின் உடலில் பற்களால் கடித்ததால் ஏற்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது சிறுமியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிராக நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பலாத்காரம், போக்சோ, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம்: குற்றவாளிகள் இருவரும் அங்குள்ள மா சாரதா தேவி கோயிலில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இருவரின் செயல் கோவிலின் புகழைக் கெடுத்து விட்டதாகவும் நிர்வாகம் சார்பில் அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அங்குள்ள உள்ள கோயில் நகரமான மைஹரில் நடந்துள்ளது. ஆசை வார்த்தைகளைச் சொல்லி அந்த அப்பாவி சிறுமியைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த கொடூரர்கள், அங்கு வைத்து அந்த சிறுமியைக் கொடூரமாகப் பலாத்காரம் செய்துள்ளனர்.
அரசியல் கட்சிகள்: இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் அத்தனையும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதை மனிதத் தன்மையில்லாத கொடூர சம்பவம் என்று விமர்சித்த மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத், இதை 2012இல் டெல்லியில் நடந்த நிர்பயா கூட்டுப் பலாத்கார சம்பவத்தைப் போலக் கொடூரமானது என்று சாடினார். மேலும், சவுஹான் தலைமையிலான பாஜக அரசில் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகச் சாடிய அவர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications