ஒரே நேரத்தில் 3 பேரை கல்யாணம் செய்த பழங்குடியின இளைஞரை நினைவிருக்கா? 2 மாசத்தில் சொன்ன குட் நியூஸ்!
போபால்: ஒரே நேரத்தில் 3 காதலிகளையும் மணந்த பழங்குடியினத்தவரை நினைவிருக்கிறதா? அவரது இரு மனைவிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூரை அடுத்த நான்பூர் கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சாம்ராத் மோர்யா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கினார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு நானிபாய் (30) என்பவரை காதலித்த சாம்ராத் அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 2008 ஆம் ஆண்டு மேலா (28) என்பவரையும், 2017ஆம் ஆண்டு சாக்ரி (25) என்பவரையும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஊருக்குத் தெரியாமல் வாழ்ந்து வந்தார்.

6 குழந்தைகள்
இவர்களுக்கு 3 ஆண், 3 பெண் என 6 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மூவரையும் ஊர்காரர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் 6 குழந்தைகளும் முன்னிருந்தனர். இதுகுறித்து சாம்ராத் கூறுகையில் நான் வெவ்வேறு தருணங்களில் இவர்கள் மூவரையும் காதலித்தேன்.

வசதி இல்லை
இவர்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு வசதி இல்லை. அதனால் இவர்களுடன் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்தேன். தற்போது எனது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதால் பெரியவர்களிடம் பேசி 3 பேரையும் ஊர் அறிய திருமணம் செய்து கொண்டேன். மூவருடனும் சிறிய அறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.

ஊர் விசேஷங்கள்
நாங்கள் அனைவரும் எங்கு போனாலும் ஒன்றாகவே போகிறோம். ஊர் விசேஷங்கள், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் எனது மூன்று மனைவிகளையும் அழைத்து செல்கிறேன் என்றார். தற்போது சாம்ராத் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி சொல்லியுள்ளார். அதாவது இவரது இரு மனைவிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார்கள்.

இருவரும் வெற்றி
அதன் முடிவுகள் வெளியான நிலையில் மேலாவும் சாக்ரியும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை போல் முதல் மனைவி நானி பாயும் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் இவர் கல்வித் துறையில் பியூனாக பணியாற்றி வருகிறார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதியால் இவர் போட்டியிடவில்லை.












Click it and Unblock the Notifications