டோல்கேட்டில் அடாவடி.. குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்! தடுக்காமல் "ரன்னிங் கமெண்ட்" அடித்த ஆண்கள்
நாசிக்: மகாராஷ்டிராவில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு வேலை செய்யும் பெண் ஊழியரும், காரில் வந்த பெண்ணும் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்னலை பார்க்க முடிகிறதோ இல்லையோ, சில கிலோமீட்டர் இடைவெளியில் கட்டாயம் ஒரு சுங்கச்சாவடியை பார்த்துவிடலாம். இவ்வாறு அதிக அளவில் சுங்கச்சாவடிகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுங்கக்கட்டணத்துக்கு என்றே ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு பகுதியில் வைக்கப்படும் சுங்கச்சாவடி, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அகற்றப்பட வேண்டும் என விதி உள்ளது. ஆனால் பல சுங்கச்சாவடி உரிமையாளர்கள் இந்த விதியை பின்பற்றுவதில்லை. இதனால் பல சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சில சமயங்களில் பொதுமக்களால் சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதுபோன்ற ஒரு சுங்கச்சாவடி தகராறு தான் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பிம்பல்கான் சுங்கச்சாவடிக்கு நேற்று காலை காரில் ஒரு பெண் வந்துள்ளார். அப்போது அவரிடம் சுங்ககட்டணம் செலுத்துமாறு அங்கிருந்த பெண் ஊழியர் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், "சில கிலோமீட்டருக்கு முன்புதான் ஒரு சுங்கச்சாவடியில் பணம் செலுத்தினேன். அதற்குள்ளாக இங்கும் பணம் கேட்கிறீர்களே.." என வினவியுள்ளார்.
அதற்கு அந்தப் பெண் ஊழியர், அதெல்லாம் தனக்கு தெரியாது என்றும், இங்கிருந்து செல்ல வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி இரு பெண்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் முடியை பிடித்து இழுத்து நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.
ஆனால், அங்கிருந்தவர்கள் யாரும் அந்த சண்டையை தடுக்க முன்வரவில்லை. மாறாக, அங்கிருந்த ஆண்கள் பலரும் ஏதோ சுவாரசியமான சம்பவம் நடப்பதை போல அவர்களின் சண்டையை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். பின்னர், சுங்கச்சாவடி பெண் ஊழியர்கள் வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்களை விலக்கி விட்டனர். இதில் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.
இரண்டு பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த சண்டையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஆண்களை கடுமையாக சாடி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications