"விதியை யாரால் தடுக்க முடியும்"- உ.பி. நிருபர் எரிக்கப்பட்டது குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து!!
அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் நிருபர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றி விதியை யாரால் தடுக்க முடியும்' என அமைச்சர் ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நிருபர் ஜாகேந்திர சிங். இவர் உ.பி. பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா பற்றி சில கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

சட்டவிரோத சுரங்கம் மற்றும் நில அபகரிப்பு விவகாரங்களில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அன்று இவரது வீட்டில் போலீசார் சோனை நடத்தியுள்ளனர். அப்போது அவரை சிலர் உயிருடன் எரித்ததாகக் கூறப்படுகிறது.
பலத்த தீக்காயம் அடைந்த சிங், கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் அளித்த வாக்குமூலமும் டி.வி.யில் வெளியானது. அமைச்சர் என்னை எரிப்பதற்கு பதில் தாக்கியிருக்கலாம் என உருக்கமாக கூறியிருந்தார்.
அமைச்சரின் உத்தரவின்பேரில் போலீசார் சிலர்தான் ஜாகேந்திர சிங் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக ஜாகேந்திர சிங்கின் மகன் புகார் கூறியுள்ளார். இந்த வழக்கை வாபஸ் பெறும்படி தன்னை அமைச்சரின் ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச தோட்டக்கலைத் துறை அமைச்சர் பரஸ்நாத் யாதவ், சில சம்பவங்கள் இயற்கையாக நடக்கின்றன. விதியை யாரால் தடுக்க முடியும் என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை அதிகரித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications