அத்தை, கல்லூரி மாணவி என 6 பெண்களை கதறக் கதற சீரழித்த உபேர் டாக்சி டிரைவர்
லக்னோ: டெல்லியில் பாலியல் பாலத்கார வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் உத்தர பிரதேசத்தில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்கள் தற்போது தான் துணிச்சலாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேசியுள்ளனர்.
டெல்லியில் 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரால் அந்த ஊரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் தற்போது தான் துணிச்சலாக முன்வந்து பேசியுள்ளனர்.
யாதவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட 46 வயது பெண் மற்றும் மேலும் 2 பெண்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

அத்தை
யாதவ் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார். அவர் என்னை அத்தை என்று அழைப்பார். அப்படி அழைத்தும் என்னை அவர் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறினால் அசிங்கம் என்று என் கணவர் தெரிவித்ததால் அமைதியாக இருந்துவிட்டேன் என்ற அந்த 46 வயது பெண் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவரது கணவர் வந்து அவரை அறைந்து இழுத்துச் சென்றார்.

2003
யாதவ் ராம்நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2003ம் ஆண்டு பலாத்காரம் செய்துள்ளார். ஊராரை சமாளிக்க முடியாமல் அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துவிட்டு ஊரை விட்டே சென்றுவிட்டார்.

சந்திரமுகி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குப்பை தட்ட சென்ற என்னை யாதவ் தாக்கி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தார். பின்னர் நான் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் என்றார் 32 வயது சந்திரமுகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கல்லூரி மாணவி
நான் 18 வயதில் யாதவால் பலாத்காரம் செய்யப்பட்டேன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கையில் இந்த கொடூரம் நடந்தது. இதையடுத்து என் பெற்றோர் என் படிப்பை நிறுத்திவிட்டு வேறு கிராமத்தைச் சேர்ந்தவருக்கு என்னை திருமணம் செய்து வைத்துவிட்டனர் என்றார் 23 வயது பெண் ஒருவர். யாதவ் இதுவரை 6 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications