மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக இணைந்த உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே- பாஜகவுக்கு வார்னிங்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளிலேயே இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கி திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் ராஜ்தாக்கரே ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை முன்வைக்கும் மும்மொழிக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக கற்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலான இந்தி மொழி திணிப்புக்கு ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவும் இணைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், இந்தி மொழி திணிப்பு போன்ற பெரிய பிரச்சனைகள் தலைதூக்கும் போது எங்களுக்கு இடையேயான விவகாரங்கள் மிக சிறியதாகிவிடும். மகாராஷ்டிராவின் நலன்களுக்காக, மராத்தி மக்களுக்காக எங்களுக்கு இடையேயான மோதல்களை கைவிட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்படப் போகிறோம் என்றார்.
ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, நானும் எங்களிடையேயான சிறு சிறு பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்திய மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட தயார். அதற்கு முன்னதாக, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்கு எதிரான சக்திகளை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதை நிறுத்த வேண்டும். மராத்தி மக்களின் நலனுக்காக மட்டும் போராட வேண்டும் என்றார்.

சிவசேனாவின் நிறுவனரான பால்தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவுடனான கருத்து வேறுபாடுகளால் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என தனிக்கட்சி தொடங்கினார் ராஜ்தாக்கரே. பாஜகவின் நட்பு சக்தியாகவே ராஜ்தாக்கரே இருந்தும் வந்தார். அண்மைக்காலமாக மராத்தி மொழி பாதுகாப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றில் பாஜகவை மிக கடுமையாக எதிர்க்கிறார் ராஜ்தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications