'போலி' பட்டியலில் திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம்! யு.ஜி.சி. 'லிஸ்ட்' ரிலீஸ்!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகமும் 'இடம்' பிடித்துள்ளது.
இது தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்கலைக்கழக மானிய குழு சட்டம் 1956 22(1)ன் படி, மத்திய, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், சட்டப்பிரிவு 3ன் கீழ் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டு சட்டவிதி 22(3)ன் கீழ் யுஜசி பாடத்திட்டத்தின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் போன்றவை மட்டுமே பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

யுஜிசி 23வது சட்டபிரிவின்படி மேற்கண்ட கல்வி நிறுவனங்கள் அல்லாத எந்த ஒரு கல்வி நிறுவனமும் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையினை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் யுஜிசி விதிமுறைகளை மீறி தங்களை பல்கலைக்கழகம் என அறிவித்திருக்கும் தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகம் உள்பட நாடுமுழுவதும் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகங்கள் எந்தவித டிகிரி படிப்பையும் நடத்த உரிமையில்லை என அறிவிக்கப்படுகிறது.
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய பல்கலைக்கழகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு யு.ஜி.சி. அறிவித்துள்ளது.
மொத்தம் 21 போலி பல்கலைக் கழகங்களை யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.
இவற்றில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக் கழகங்களை பட்டியலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications