மனைவியை விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்த உத்தரகாண்ட் முதல்வர்: உமாபாரதி தாக்கு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முதல்வர் ஹரிஷ் ராவத் முதல் மனைவி பசந்த் தேவி மாயமாகிவிட்டதாக என்னிடம் தகவல் உள்ளது. அல்மோரா தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இரு்நது பசந்த்தேவி பெயரை நீக்குமாறு சஞ்சய் ராவத் என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம்-7ன்படி வாக்காளர் பட்டிலில் இருந்து பெயரை நீக்க, குறிப்பிட்ட வாக்காளர் காணாமல் போயிருந்தாலோ, வெளிநாடு போயிருந்தாலோ இல்லை அந்த நபர் இறந்து போயிரு்நதாலோ கோரிக்கை விடுக்க முடியும்.
எனவே பசந்த் தேவி பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க என்ன காரணம் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பாஜக மகளிர் அணி சார்பில் பசந்த் தேவியை இரு நாட்களுக்குள் கண்டுபிடித்து தருமாறு மாநில டிஜிபிக்கு கோரிக்கைவிடுக்கப்படும்.
முதல்மனைவி பற்றி தகவல் இல்லாத நிலையில், ஹரிஷ் ராவத் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்பதால் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்மோராவில் ஏற்கனவே முத்லவருக்கும் அவரது இரண்டாவது மனைவி ரேணுகாவுக்கும் வாக்குரிமை உள்ள நிலையில், டேராடூனிலும் வாக்குரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது தேர்தல் விதிமீறிய செயல் என்றார்.












Click it and Unblock the Notifications