சிறையில் பிரியாணி, சிகரெட் கேட்ட ஜேஎன்யூ மாணவர்கள்
டெல்லி: தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் மோமோவும், அனிர்பன் பட்டாச்சார்யா பிரியாணியும், சிகரெட்டும் வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவை புகழ்ந்து மாணவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
அப்சல் குருவை புகழ்ந்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர் சங்க தலைவர் கன்யா குமார், மற்றும் இரண்டு மாணவர்களான உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோரை தேச துரோக வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உணவு
பல்கலைக்கழக வளாகத்தில் சாப்பிட்டது போன்றே சிறையிலும் அதே வகையான உணவு வகைகளை உமர் காலித்தும், அனிர்பனும் எதிர்பார்ப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோமா, பிரியாணி
தனக்கு மோமோ வேண்டும் என்று உமர் காலித் போலீசாரை கேட்டுள்ளார். அனிர்பனோ தனக்கு பிரியாணியும், சிகரெட்டும் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தேச துரோக வழக்கு
நீங்கள் இருவரும் தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளீர்கள். இங்கு எல்லாம் பல்கலைக்கழகம் போன்று வகை, வகையான உணவு கேட்டால் அளிக்க முடியாது. உங்களுக்கு மட்டும் பாரபட்சமாக உணவு அளிக்க மாட்டோம் என்று போலீசார் காலித் மற்றும் அனிர்பனிடம் தெரிவித்துள்ளனர்.

இல்லவே இல்லை
பிப்ரவரி 9ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ குமார், காலித், அனிர்பனுக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த மூன்று பேரும் தாங்கள் குருவை புகழ்ந்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிடவே இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அது யாரோ
கோஷமிட்ட சிலரை வீடியோவில் போலீசார் காட்ட அதை பார்த்த காலித், குமார், அனிர்பன் அந்த நபர்களை தங்களுக்கு யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளனர். சிலர் கோஷமிட்டதாக அனிர்பன் தெரிவித்துள்ளார். யாரும் கோஷமிட்டதாக தெரியவில்லை என்று காலித் கூறியுள்ளார்.

விசாரணை
போலீசார் குமார், காலித், அனிர்பனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் மூன்று பேர் அளித்த வாக்குமூலங்களை போலீசார் ஒப்பிட்டு வருகிறார்கள். மேலும் வெளியாட்கள் யாராவது பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து கோஷமிட்டனரா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications